மகளிர் கிரிக்கெட் இரண்டாவது போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

by Admin / 24-12-2025 01:47:19am
மகளிர் கிரிக்கெட் இரண்டாவது போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் இரண்டாவது போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி 2 _ 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட  டி 20 தொடரில் இந்திய மகளிர் அணி இரண்டு போட்டிகளில் வென்று உள்ளது.ஷஃபாலி வர்மா 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினார், இது இந்திய அணிக்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுத் தந்தது.ஜேமிமா ரோட்ரிக்ஸ்15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து உதவினார்.ஸ்னேஹ ராணா, வைஷ்ணவி ஷர்மா மற்றும் ஸ்ரீ சரணி ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சும் அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மகளிர் கிரிக்கெட் இரண்டாவது போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
 
Tags :

Share via