ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏ.வி.எம் 3 ராக்கெட் மூலம் அமெரிக்காவின்செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.
இன்று காலை 8 .54 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏ.வி.எம் 3 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் ஏ .எஸ் .டி .ஸ்பேஸ் மொபைலுக்கான ப்ளூ பேக் 2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது. இது சாதாரண ஸ்மார்ட்போன்களுக்கு 4g 5g இணைப்பை வழங்கும். மேலும் இது, இஸ்ரோவின் 101 -வது ஏவுதல் மற்றும் எல் .வி. எம். திரி ராக்கெட்டின் ஆறாவது வணிகப் பயணம் ஆகும். இதன் மூலம் தொலைதூரப் பகுதிகளுக்கு நேரடி மொபைல் பிராட்பேண்ட் இணைப்பை வழங்க முடியும். ஏ. எஸ். டி .ஸ்பேஸ் மொபைல் இன் ப்ளூபெர் பிளாக் 2 எல். வி .எம் .3 ராக்கெட் மூலம் சதிஷ் கபான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது. இது பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் வைக்கப்படும் மிகப்பெரிய வணிக தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். மேலும் lv மூலம் ஏவப்படும் மிகக் கனமான பேலோடும் இதுவாகும்.. எல்.வி.எம். 3 யின் ஒன்பதாவது மிஷன் மற்றும் இஸ்ரோவின் 2025 -ல் ஐந்தாவது விண்வெளி பயணம் ஆகும்.. இத்திட்டத்தின் மூலம் உலகளாவிய டிஜிட்டல் இடைவெளி குறையும் என்று எதிா்பாா்க்கலாம்.
Tags :














.jpg)



