ராஜஸ்தானில் வரலாறு காணாத மழை
ராஜஸ்தானில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மே மாதத்தில் மழை பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. பொதுவாக ராஜஸ்தானில் மே மாதத்தில் சராசரியாக 13.6 மிமீ மழை பெய்ய கூடும். ஆனால் இந்த முறை வடமேற்கு இந்தியாவில் பெய்த பருவமழை அல்லாத மழைப்பொழிவு மற்றும் பிற காரணங்களால் ராஜஸ்தானில் 62.4 மிமீ மழை பெய்துள்ளது. கடந்த 1917 ஆம் ஆண்டு மே மாதத்தில் 71.9 மிமீ மழை பதிவானதை தொடர்ந்து 100 ஆண்டுகள் கழித்து தற்போது வரலாறு காணாத அதிக மழை பதிவாகியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :