லட்டு வில் மூக்குத்தி வைத்து கொடுக்குறார்கள் - சீமான் சாடல்

by Staff / 30-06-2024 01:27:23pm
லட்டு வில் மூக்குத்தி வைத்து கொடுக்குறார்கள் - சீமான் சாடல்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக (ஒலிவாங்கி) மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற மருத்துவர் அபிநயாவை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று இரவு இராதாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் தலைமை சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், அறிவுக் கருவறையான பள்ளியில் நம்மைச் சுமக்கும் ஆசிரியர்களே வீதியில் நின்று போராடினார்கள். தோற்றுப் போனார்கள் திராவிட ஆட்சியாளர்கள். எங்களை படிக்க வைத்த ஐயா கருணாநிதி அவரது மகனை படிக்க வைக்கவில்லையே, பாலியல் பலாத்காரம் என சொல்வதற்கு பதிலாக பாலியல் பலகாரம் என்கிறார். பார்த்து படிக்கவே 10 தவறாக சொல்கிறார். இவர்கள் தோற்றுப் போனார்கள் என்று சாடினார்.

 

Tags :

Share via

More stories

Logo