தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கடநாராயணாவை நியமித்ததற்கு எதிா்ப்பு.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயக படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கடநாராயணாவை தமிழக முதலமைச்சர் விஜய் நியமித்தார். தமிழகத்தை பூர்வீகமாக கொள்ளாத ஆந்திராவைச் சார்ந்த கர்நாடக தொழில் அதிபரும் திரைப்பட தயாரிப்பாளரை நியமித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.. பாஜக தலைவர் நைனா நாகேந்திரன் தமிழில் எழுதவோ படிக்கவோ தெரியாத ஒருவரை டெல்லி பிரதிநிதியாக நியமித்து தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழக வெற்றிக்கழக அரசு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளதாகவும் கர்நாடகா மாநிலத்துடன் காவிரி நீர் மற்றும் மேகலாது அணை போன்ற வாழ்வாதார பிரச்சனைகள் நிலவி வரும் சூழலில் கர்நாடகா முதல்வர் டி கே சிவகுமார் உடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒருவரால் தமிழகத்தின் உரிமைகளை டெல்லியில் எப்படி நிலைநாட்ட முடியும் என்றும் கேள்வி அனுப்பி உள்ளனர். தனது திரைப்படத்தை தயாரித்தவர் என்ற ஒரே காரணத்திற்காக பொது நிர்வாகத்திலோ அல்லது அரசியல் ராஜதந்திரத்திலோ எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாத தமிழர் அல்லாத ஒருவரை இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அரசு பொறுப்பில் முதலமைச்சர் விஜய் பணி அமர்த்திருப்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவைச் சார்ந்த ராசா அரசின் வெளிப்பட தன்மை மற்றும் நல்லாட்சி கொள்கைகளில் இருந்து இந்த அரசு விலகிச் செல்வதாக குற்றம் சாட்டியுள்ளார். அம்மா முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விஜய்க்கு தமிழக மக்கள் நல்லாட்சி வழங்குவார் என்பதற்காக தான் வாக்களித்தார்கள் தவிர தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அரசு உயர் பதவிகளை தூக்கி கொடுத்து நெருங்கியவர்களுக்கான சலுகை காட்டுவதற்காக அல்ல என்றும் இந்த நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஓராண்டு காலத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த நியமனம் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
Tags :



















