சென்னை உயர் நீதிமன்றம் ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவிற்கு இடைக்கால தடை.

by Admin / 28-06-2026 11:26:05pm
சென்னை உயர் நீதிமன்றம் ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவிற்கு இடைக்கால தடை.

சென்னை உயர் நீதிமன்றம் ஆய்வாளர் விமலாவுக்கு விதிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. ஆய்வாளர் விமலாவுக்கு எதிராக கடந்த ஜூன் 17 அன்று பிறப்பிக்கப்பட்ட பணி இடை நீக்க உத்தரவுக்கு ஜூலை 9 2026 வரை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை இயக்குனர் பிறப்பித்த இந்த உத்தரவு தனிப்பட்ட உள்நோக்கம் மற்றும் விரோதித்தன் வெளிப்பாடாக இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் இவ்வகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை ஜூலை 9ஆம் தேதிக்குள் விரிவான பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உள்ளது. சென்னை விபச்சார தடுப்பு ஆய்வாளர் ராஜலட்சுமிக்கு எதிராக எழுந்த லஞ்சப் புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையின் மூத்த அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரிலே விமலா முதல் கட்ட விசாரணை நடத்தியதாகவும் விமலா தயாரித்த முதல் தகவல் அறிக்கை வரைவு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அன்று எஸ்பி அதனை ஆய்வு செய்து சில திருத்தங்களை மேற்கொண்ட பிறகு முறைப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் உயர் அதிகாரிகளின் உத்தரவு மற்றும் ஒப்புதலின் பேரில் சட்டப்படியான வழக்கு பதிவு நடவடிக்கையை ஆய்வாளர் விமலா மேற்கொண்டதாகவும்லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆய்வாளர் விமலாவை திடீரென பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த பணியிடை நீக்க உத்தரவை எதிர்த்து விமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போது உரிய விதிமுறைகளை பின்பற்றி வழக்கு பதிவு செய்வதற்காக பலி வாங்க நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆய்வாளர் விமலாவால் அளிக்கப்பட்ட ஆவணங்களை சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக பரிசீலித்த பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை தன்னிச்சையாக எடுத்த இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து விமலாவின் பணியிடை நீக்க உத்தரவை நிறுத்தி வைத்து ஆணையிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவிற்கு இடைக்கால தடை.
 

Tags :

Share via

More stories

Logo