தேனீக்கள் தாக்கி வன ஊழியர்கள்,சுற்றுலா பயணிகள் படுகாயம் பாலருவி நீர்வீழ்ச்சி மூடல்..

தமிழக-கேரள எல்லைப் பகுதியான கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் உள்ளது பாலருவி நீர்வீழ்ச்சி. பால் போன்று அருவி நீர் கொட்டும் இந்த அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வரும் நிலையில், கேரளாவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு கேரள மாநிலத்தவர்களை விட தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் சென்று வருவது வழக்கம்.
அந்த வகையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் பாலருவி நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக நின்று கொண்டிருந்த போது, திடீரென அந்த பகுதியில் இருந்த பெரிய அளவிலான தேன் கூட்டை சில நபர்கள் விளையாட்டாக கலைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேனீக்களானது அந்தப் பகுதியை சுத்து போட்ட நிலையில், அங்கு நின்று கொண்டிருந்த வனத்துறை அதிகாரிகள், வனத்துறை ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என 25க்கும் மேற்பட்டவர்களை கடித்த நிலையில், சுற்றுலா பயணிகள் அங்கும் இங்குமாக ஓடி சிலர் தப்பித்துக் கொண்டனர்.
தொடர்ந்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கூடுதல் வனத்துறையினர் தீ வைத்து தேனீக்களை விரட்டி பாதிப்படைந்த வன ஊழியர்களையும், சுற்றுலாப் பணிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திடீரென ஏற்பட்ட இந்த அசம்பாவித சம்பவத்தின் காரணமாக பாலருவியானது மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : தேனீக்கள் தாக்கி வன ஊழியர்கள்,சுற்றுலா பயணிகள் படுகாயம் பாலருவி நீர்வீழ்ச்சி மூடல்..