இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம் ...பயனர்களின் வைரல் மீம்ஸ்

by Editor / 06-09-2021 10:08:16am
இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம் ...பயனர்களின் வைரல் மீம்ஸ்

பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம், இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் இன்று காலை திடீரென்று முடங்கியது.

இன்று காலை 11 மணியளவில் சர்வர் கோளாறால் இன்ஸ்டாகிராம் சேவை இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் திடீரென முடங்கியதாக இணையதளங்களை கண்காணிப்பு வலைத்தளமான டவுன் டிடக்டர் கூறியது.குறிப்பாக,சுமார் 45% தங்களின் மொபைல்களில் இன்ஸ்டாகிராம் செயலி லோட் ஆகவில்லை எனவும், 33% வெப்சைட்டில் இன்ஸ்டாகிராம் லோட் ஆகவில்லை எனவும் மீதமுள்ள 22 சதவீதத்தினர் சர்வர் இணைப்பில் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதாக காட்டுவதாக புகார்கள் அளித்ததாக டவுன் டிடக்டர் தெரிவித்தது.எனினும்,பிழையின் காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 

Tags :

Share via