உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்யா சதி திட்டம்

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 27 நாட்களாக முழு வீச்சிலான போரில் ஈடுபட்டு வரும்
ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் மிகவும் துணிச்சலாகப் போராடி வருகிறது. இதனால் பல பகுதிகளில் ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாமல் ஸ்தம்பித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் 4-ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ் கியை படுகொலை செய்ய அதிருப்தி குழு போராளிகளை உக்ரைன் நாட்டில் ரஷ்யா அனுப்பி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் புலனாய்வு இயக்குநரகம் தனது பேஸ்புக் பதிவில்,புதினுக்கு நெருக்கமான ரஷ்ய ஆதரவாளரான யெவ்ஜெனி பிரிகோஜினுடன் தொடர்புடைய அதிருப்தி வாக்னர் குழுவினர் இன்று உக்ரைனுக்கு வரத் தொடங்கினர் என்றும், உக்ரைன் நாட்டின் உயர்மட்ட ராணுவ மற்றும் அரசியல் தலைமையை அகற்றுவதே இவர்களின் முக்கிய இலக்கு என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை புலனாய்வு இயக்குநரகம், "ரஷ்ய ஆதரவு படைகளின் ஹிட் லிஸ்ட்டில் உள்ள முக்கிய இலக்குகளில் ஜெலன்ஸ்கியை தவிர, உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால், உக்ரைன் தலைமை வழக்கறிஞருமான ஆண்ட்ரி எர்மாக் ஆகியோரும் அடங்குவர் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது
இவர்களைத் தவிர வேறு சில நபர்களையும் கொல்ல புதின் நேரடியாக உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், அவர்களின் முயற்சிகள் வெற்றி பெறாது. பயங்கரவாதிகள் கொல்லப்படுவார்கள்" என்று அந்த முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளது.
Tags :