“ரக்ஷா பந்தன்“ பண்டிகைப் பரிசாக சகோதரிகளுக்கு சமையல் எரிவாயு விலையை குறைத்த பிரதமர்-தமிழிசை சௌந்தரராஜன்

by Editor / 30-08-2023 09:09:42pm
“ரக்ஷா பந்தன்“ பண்டிகைப் பரிசாக சகோதரிகளுக்கு சமையல் எரிவாயு விலையை குறைத்த பிரதமர்-தமிழிசை சௌந்தரராஜன்

புதுவை துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்-இன்றுவிடுத்துள்ள அறிக்கை வருமாறு:
“ரக்ஷா பந்தன்“ பண்டிகைப் பரிசாக இந்திய நாட்டு சகோதரிகளுக்கு சமையல் எரிவாயு விலையை குறைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலின்டரின் விலை ரூ. 200 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் “உஜ்வாலா“ திட்டத்தின் மூலம்  வழங்கப்படும் சமையல் எரிவாயு மானியம்  ரூ. 200 லிருந்து ரூ. 400 ஆக உயரும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி உஜ்வாலா திட்டப் பயனாளிகள் பயனடைவார்கள்.

ஏற்கனவே புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலன்டரின் விலை ரூ. 300 மானியம் வழங்கப்படும் நிலையில், பாரதப் பிரதமர் அவர்களின் தற்போதைய அறிவிப்பால் மேலும் ரூ. 200 குறைந்து (ரூ. 500 ஆகக் குறைந்து) இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் புதுச்சேரியில் உள்ள சகோதரிகள் “ரக்ஷா பந்தன்“ விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது உஜ்வாலா திட்டத்தின்கீழ் புதிதாக 75 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகளும் வழங்கப்பட உள்ளது.  சமையல் எரிவாயு சிலின்டரின் விலையைக் குறைத்த  பாரதப் பிரதமரின் தலைமையிலான மத்திய அரசிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
 

 

Tags : “ரக்ஷா பந்தன்“ பண்டிகைப் பரிசாக சகோதரிகளுக்கு சமையல் எரிவாயு விலையை குறைத்த பிரதமர்-

Share via