வேங்கைவயல் மனிதக் கழிவு விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்

வேங்கைவயல் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்று சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தெரியவந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கிறது. 11 பேரின் டிஎன்ஏவை பரிசோதனை செய்ய புதுக்கோட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மனிதக் கழிவுகள் கலந்த நீரை பகுப்பாய்வு மையத்தில் சோதனை செய்ததில் இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
Tags :