யூடியுபர் மீதான வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வீடியோ மூலம் வதந்தி பரப்பி கைதானவர் யூடியுபர் மணிஷ் காஷ்யப். இவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கு குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மணிஷ் காஷ்யப்பை கைது ஏன்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், போலி வீடியோக்கள் தயாரித்து, வதந்தி பரப்பியுள்ளார் என்று தமிழ்நாடு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் முன்வைத்தார். மதுரை சிறையில் இருந்து மணிஷ் காஷ்யப்பை மாற்றக்கூடாது என உத்தரவிட்டு வழக்கு 28ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Tags :