கள்ளக்காதலனுக்காக சகோதரனை துண்டு துண்டாக வெட்டிய பெண்

கள்ளக்காதலனுக்காக தனது சொந்த சகோதரனையே இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். கர்நாடக மாநிலம் விஜயபுராவை சேர்ந்த பாக்யஸ்ரீ என்பவருக்கும், மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற சங்கரப்பா என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருப்பதை பாக்யஸ்ரீயின் சகோதரர் லிங்கராஜு எதிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாக்யஸ்ரீ லிங்கராஜுவை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி காதலனுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் வீசியுள்ளார். 2015இல் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.
Tags :