மத்திய அமைச்சருடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

by Staff / 19-03-2023 01:01:56pm
மத்திய அமைச்சருடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

சென்னை, சேப்பாக்கத்தில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உடன், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் மத்திய அமைச்சரிடம் தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கங்கள் உருவாக்குவது, ஊரகப்பகுதிகளில் சிறந்த கட்டமைப்புகளுடன் கூடிய மைதானங்கள் அமைப்பது, விளையாட்டு பயிற்சி மையங்கள் அமைத்தல் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைககளை முன் வைத்தார். விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அனுராக் தாகூர் சென்னை வந்துள்ளார்.

 

Tags :

Share via