பெரியார்வேடமிட்டு பேசிய குழந்தையை தூக்கில் விடவேண்டும் என முகநூலில் கருத்து பதிவிட்ட நபர் கைது

by Admin / 26-02-2022 05:18:33pm
பெரியார்வேடமிட்டு பேசிய குழந்தையை  தூக்கில் விடவேண்டும் என முகநூலில் கருத்து பதிவிட்ட நபர் கைது

தனியார் தொலைக்காட்சியில் பெரியார் வேடமிட்டு பேசிய குழந்தையை தூக்கிலிட வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டதூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

எட்டயபுரம் ரோட்டை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவராக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் வேடமணிந்து பேசிய குழந்தைகளை அவமதிக்கும் வகையில் முகநூலில் கருத்து விட்டுவிட்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து திமுக நகர செயலாளர் சுரேஷ் கண்ணன் அளித்த புகாரின் பேரில் வெங்கடேஷ் குமார் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

 

Tags :

Share via

More stories

Logo