மரம் வேரோடு முறிந்து சாய்ந்து கீழே விழுந்தது

by Admin / 18-12-2023 02:44:40pm
மரம் வேரோடு முறிந்து சாய்ந்து கீழே விழுந்தது

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது இதனால் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 17ஆம் தேதி  முதல் 19ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று இன்று மாலை முதல் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்த சூழலில் மாலை 4 மணி அளவில் கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே புளியமரம் வேரோடு முறிந்து சாய்ந்து கீழே விழுந்தது. தீயணைப்பு நிலையம் அருகே டூரிஸ்ட் வேன் ஸ்டாண்ட் உள்ளது. மரம் முறிந்து விழுந்ததில் டூரிஸ்ட் வேன் ஒன்று முற்றிலும்  உருக்குலைந்து சேதமடைந்தது. வேனில் இருந்த டிரைவரும் கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு நிலைய மீட்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் கோவில்பட்டி டு திருநெல்வேலி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via