ரயில்கள் நிறுத்தம் பயணிகள் கடும் அவதி

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் மற்றும் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம் பயணிகள் கடும் அவதி
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம் மற்றும் கண்மை உடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் சாத்தூர் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிஜாமுதீனிலிருந்து கன்னியாகுமரி செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் முத்துநகர் விரைவு ரயில் ஆகியவை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை தொடர்ந்து ரயில் பயணிகள் கடும் மழையினால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் உடனடியாக தமிழக அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :