தோசைக்காக இவ்வளவு பிரச்சனையா... ஓட்டலையே அடித்து நொறுக்கியவர்கள்..
காரைக்காலில் தோசை தராததால் உணவகத்தை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தியாகராஜன் என்பவர் சாப்பிட தோசை கேட்டுள்ளார். வெகு நேரம் ஆகியும் அவருக்கு தோசை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த தியாகராஜன் ஓட்டல் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், தன் நண்பர்களை வரவழைத்த தியாகராஜன், ஹோட்டலை அடித்து நொறுக்கியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தியாகராஜன் உள்பட மூன்று பேரை கைது செய்துள்ள நிலையில், தலைமறைவான மேலும் ஆறு பேரை தேடி வருகின்றனர்.
Tags :