பேருந்து கவிழ்ந்த விபத்தில், 25 பேர் உயிரிழந்தனர்.

by Staff / 10-08-2025 09:03:36am
பேருந்து கவிழ்ந்த விபத்தில், 25 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நியாஹெரா நகரில் இருந்து நியாகாச்சிற்கு சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்தில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பெண்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களது குடும்பத்தினருக்கு அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Tags : பேருந்து கவிழ்ந்த விபத்தில், 25 பேர் உயிரிழந்தனர்.

Share via