திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளையும், நாளை மறுதினமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு, அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். மேலும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்துக்கு கடந்த மாதத்தில் முதலமைச்சர் செல்லவிருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், 2 நாள் பயணமாக திருப்பூர் மாவட்டத்துக்கு நாளை 10 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்படுகிறார். சென்னையிலிருந்து நாளை மாலை 5.30 மணியளவில் விமானம் மூலம் புறப்பட்டு, கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக மடத்துக்குளம் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
Tags : திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார்.