எந்தபதவிக்கும் நான் ஆசைப்பட்டதில்லை-கோவைமக்கள் ஏமாற்றி விடாதீர்கள் வாய்ப்புத்தாருங்கள் -உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் .

by Editor / 26-12-2021 08:00:59pm
எந்தபதவிக்கும் நான் ஆசைப்பட்டதில்லை-கோவைமக்கள் ஏமாற்றி விடாதீர்கள் வாய்ப்புத்தாருங்கள் -உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் .

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட இளைஞர்கள்-இளம் பெண்களைக் திமுகவில்  உறுப்பினர்களாகச் சேர்க்கும் முகாம்  இன்று காளப்பட்டியில் நடைபெற்றது. திமுக  உறுப்பினர்கள் சேர்ப்பு முகாமில் பங்கேற்று பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின்,  தான் அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பொறுப்புகளுக்கு ஆசைப்படாதவன் என்று தெரிவித்தார்.


இந்நிலையில், ஒருங்கிணைந்த கோவையில் திமுகவில்  இளைஞர்கள் இளம்பெண்களை சேர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.  இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், கொரோனாவில் இருந்து தமிழகத்தை காப்பாற்றி உள்ளோம். இனிவரும் நோயையும் எதிர்கொள்வோம். பெட்ரோல் டீசல் விலை ,ஆவின் பால் விலையை முதல்வர் குறைத்துள்ளார்.

தொகுதிக்கு 10,000 பேரை கழகத்தில் சேர்க்க வேண்டும் என இலக்கு தரப்பட்டு 24 லட்சம் பேரை இணைத்துள்ளோம்.  திமுக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் சேர்ந்து 2கோடி பேரை திமுகவில் சேர்க்க வேண்டும் என்ற இலக்கு தரப்பட்டுள்ளது. அதனை முடிக்க வேண்டும்.8 மாத சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் என்றுதெரிவித்த அவர் , 

”நான் அமைச்சர் துணை முதல்வர் பொறுப்பிற்கு ஆசைபடாதவன்.என்றார்.மேலும் அவர் கூறுகையில்  கடந்த தேர்தலில் கோவை மக்கள் திமுகவுக்கு ஏமாற்றம் அளித்தீர்கள். 10தொகுதியில்  ஜெயித்துவிடுமென நம்பிய நிலையில் 1தொகுதியில் கூட வாய்ப்பை கொடுக்கவில்லையென்றார்.மேலும் கோவை மக்களை நம்பிஇருக்கிறோம்.மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் எங்களை ஏமாற்றி விடாதீர்கள்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இதன்தொடர்ச்சியாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட இளைஞர்கள்-இளம் பெண்களைக் திமுகவில்  உறுப்பினர்களாகச் சேர்க்கும் முகாம்  இன்று காளப்பட்டியில் தொடங்கி வைத்தபோது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பலர் எங்களிடம் மனு அளித்தனர். பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தோம்.என்றும் அவர் தந்து பதிவு தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via