தங்கையிடம் சில்மிஷம்.. கத்தியால் குத்திய 16 வயது அண்ணன்

நாமக்கல்லில் தங்கையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை சிறுமியின் அண்ணன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள வீரியம்பாளையத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜெகநாதன்(45). இவர் சிறுமியின் கையை பிடித்து இழுத்து தகாத முறையில் நடந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் 16 வயது அண்ணன், ஜெகநாதனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். படுகாயமடைந்த ஜெகநாதன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Tags :