14 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சண்டிகர்: 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 41 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமித் மற்றும் புமிந்தர் சிங் ஆகியோர் தன்னை தனித்தனியாக பலாத்காரம் செய்ததாக சிறுமியின் சார்பாக புகார் தரப்பட்டது. ஆனால் நீதிமன்ற விசாரணையில் அமித் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர் விடுவிக்கப்பட்டார். புமிந்தருக்கு தண்டனை உறுதியானது.
Tags :