இன்று மாலை பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில், நடப்பு நிதியாண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் இன்று (மே 24) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இதில், தமிழ்நாட்டிற்கான நிதிதேவைகள் குறித்து கூட்டத்தில் முதலமைச்சர் எடுத்துரைக்கிறார். நிதி ஆயோக் கூட்டத்திற்கிடையே பிரதமர் மோடியை முதலமைச்சர் சந்திப்பார் என தகவல் வெளியானது. இந்நிலையில், மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Tags :