மீண்டும் பாராளுமன்றம் செல்கிறார் ராகுல் .

by Editor / 04-08-2023 07:16:43pm
மீண்டும் பாராளுமன்றம் செல்கிறார் ராகுல் .

ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி உத்தரவு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலின் பொழுது மோடி ஜாதியை அவமதித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. பாராளுமன்ற செயலகமும் அவரது எம்பி பதவியை பறித்தது. இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் மேல்முறையோடு செய்தார் அதற்கு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் இதனைத்தொடர்ந்து வழக்கின்  விசாரணை முடிந்து இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

 தீர்ப்பு நீதிபதிகள் சூரத் நீதிமன்ற நீதிபதி உச்சபட்ச தண்டனையை ஏன் வழங்கினார் என்பதற்கான  காரணம் 125 பக்க தீர்ப்பில் இல்லை என்றும் ராகுலுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது மூலம் வயநாடு பாராளுமன்ற தொகுதி மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர் என்றும் ராகுல் காந்தி பொதுவெளியில் பேசும் பொழுது கவனமாக பேசியிருக்க வேண்டும் என்றும் இரண்டு ஆண்டு கால தண்டனைக்கு  இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தனர்.. இதன் மூலம் ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை திரும்ப பெறக்கூடிய வாய்ப்பு உருவாகி உள்ளது.

 

Tags :

Share via