விருதுநகரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆய்வு
தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தோதலை செப்டம்பா் மாதத்திற்குள் நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், விருதுநகா் நாராயண மடம் தெருவிலுள்ள சமுதாயக்கூடத்தில் வைக்கப்பட்டி ருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு விபரம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா். அங்கு 1600 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 4,600 இயந்திரங்கள் இருப்பது தெரிந்தது. தொடா்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் மழை நீா்க் கசிவு,
மின்சாரக் கசிவு ஏற்படாமல் தடுக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநா் (மா.ஊ.வ.மு) திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நோமுக உதவியாளா் (தோதல்) சந்திரசேகரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
Tags :





.jpeg)









.jpg)
.jpg)
.jpg)
.jpg)
