அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - டி.எஸ்.பி திடீர் விலகல்.

by Editor / 30-01-2025 04:53:22pm
அண்ணா பல்கலை மாணவி  பாலியல் வன்கொடுமை வழக்கு - டி.எஸ்.பி திடீர் விலகல்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து சைபர் கிரைம் டி.எஸ்.பி ராகவேந்திரா கே. ரவி விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், தமிழக டி.ஜி.பி-க்கு எழுதியுள்ள கடிதத்தில், பணியை சரியாக செய்யவிடாமல் சிறப்பு புலனாய்வு குழு ஐ.பி.எஸ் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக சைபர் கிரைம் பிரிவில் பணிபுரிந்துவரும் ராகவேந்திரா, காவல்துறையில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - டி.எஸ்.பி திடீர் விலகல்.

Share via