கணவனுக்கு ஸ்லோ பாய்சன் அதிர்ச்சி சம்பவம்

குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்த வடிவேல் முருகன் என்பவருக்கு இறச்சக்குளம் பகுதியை சேர்ந்த சுஜா என்பவருடன் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு மாத காலமாக சுஜாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட, வடிவேலு அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார். அப்போது, சுஜா தனது முன்னாள் காதலனுடன் சேர்ந்து வடிவேலுக்கு மருந்தில் எதையோ கலந்து கொடுத்து வருகிறார் என்பது வடிவேலுக்கு தெரிய வர வடிவேலு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திடீரென வடிவேலு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுக்குறித்த தீவிர விசாரணையில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Tags :