இந்தியா முழுவதும் இன்று காந்தி ஜெ யந்தி கொண்டாடப்படுகிறது
அகிம்சா எனும் ஆயுதமேந்தி கத்தி இன்றி யுத்தமின்றி ..இந்திய விடுதலைக்காக போராடியவர் காந்தி.சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று இறுமாந்த காலனியாதிக்கவாதிகளை அடியோடு வேரறுத்தவர்.இந்தியர்களின் ஒற்றுமைக்காக
ஆலன் ஆக்டோஹியூமால் தொடங்கபெற்ற காங்கிரசு இயக்கத்தின் வழிநின்று ,அதை வலிமைபடுத்திய விடுதலை எனும்
பெரு நெருப்பை மக்களின் நெஞ்சில் மூட்டியவர்.வன்முறையற்ற வெற்றிதான் இந்தியாவிற்கு தேவை என்பதை அறிந்து
மக்கள் சக்தியை அகிம்சா வழி திரட்டி ஆங்கிலேயர்களை அலறவைத்தவர்.இந்தியா தனித்து பிரிக்க மதம் காரணமாக
இருந்தபொழுது மனம் நொந்தவர் இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்பு காங்கிரஸ் பேரியக்த்தை கலைத்து விட சொன்னவர்.மகாத்மா என்று அழைக்கப்பட்ட அப்புனிதரின் பிறந்த நந்நாள் காந்தி ெஜயந்தியாகக்கொண்டாடப்படுகிறது.
Tags :