முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு

புவிசார் குறியீடு மானியத்தை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதே போல், அம்பத்தூரில் ரூ.5 கோடி செலவில் அளவியல் மற்றும் உலோகவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் காஞ்சிபுரம் பழந்தண்டலத்தில் ரூ.5 கோடி செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். சிறு நிறுவனங்களுக்கு காட்சிக்கூட கட்டணத்துக்கான நிதியுதவியை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக அதிகரித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Tags :