அரசியல் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

கோவை கணபதி பகுதியில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று வருகிறார். அதன்படி கடந்த பத்தாம் தேதி இங்கு வந்த அவர், தொடர்ந்து அங்கு தங்கி சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சையை முடித்துக் கொண்டு நேற்று கார் மூலம் சொந்த ஊரான தேனிக்கு புறப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் பன்னீர்செல்வத்திடம், அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் இன்று விடுமுறை, வணக்கம், வாழ்த்துக்கள் என மட்டுமே கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்
Tags :