கார்கில் போரில் உயர்நீத்த சரவணனுடைய நினைவு நினைவு தூணுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அஞ்சலி

கார்கில் போரில் உயர்நீத்த சரவணனுடைய நினைவு நினைவு தூணுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ,நகர் புற வளர்ச்சி மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே. என் .நேரு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக துணை பொது செயலாளர் ஏ .ராசா உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். .இரண்டு நாள் பயணமாக திருச்சி சென்றுள்ள முதலமைச்சர் இன்று மாலையில் நடக்க இருக்கும் டெல்டா பகுதியில் உள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களோடு கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற உள்ளது.. அதற்கு முன்னதாக முதல் நிகழ்வாக கார்க்கில் உயிர் நீத்த வீரருக்கு அஞ்சலி.... கார்கில் போரில் வெற்றி பெற்ற தினமாகும் கொண்டாடப்படும் இன்றைய தினத்தில், இந்தியா முழுவதும் உள்ள நினைவு தூண்களில் மரியாதை செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
Tags :