நீட் 31 மாவட்டங்களில் 200க்கும் அதிகமான தேர்வு மையங்கள்.7 மாவட்டங்கள் புறக்கணிப்பு.

by Editor / 02-05-2025 10:56:39pm
நீட் 31 மாவட்டங்களில் 200க்கும் அதிகமான தேர்வு மையங்கள்.7 மாவட்டங்கள் புறக்கணிப்பு.

நீட் நுழைவு தேர்வு வரும் 4ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் மட்டும் 31 மாவட்டங்களில் 200க்கும் அதிகமான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரம்பலூர், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், தேனி ஆகிய ஏழு மாவட்டங்களின் பெயர்கள் தேசிய தேர்வு முகமை பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பழைய ஒருங்கிணைந்த மாவட்ட நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : நீட் 31 மாவட்டங்களில் 200க்கும் அதிகமான தேர்வு மையங்கள்.7 மாவட்டங்கள் புறக்கணிப்பு.

Share via