தூத்துக்குடியில் வின் பாஸ்ட் கார் தொழிற்சாலையை முதல்வர் திறந்துவைத்தார்.

by Staff / 04-08-2025 12:12:37pm
தூத்துக்குடியில் வின் பாஸ்ட் கார் தொழிற்சாலையை முதல்வர் திறந்துவைத்தார்.

தூத்துக்குடியில் வின் பாஸ்ட் கார் தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்து அடைந்தார்.

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்க மஹாலில் வைத்து முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில்   சுமார் 49 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 32,554 கோடி முதலீட்டில் அமைக்கப்படக்கூடிய 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. 

3600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 2530 கோடி ரூபாய் முதலீட்டு ஐந்து திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு பின் பாஸ்ட் உயர் அதிகாரிகளே இந்த நேரத்தில் நான் மனதார வரவேற்கிறேன்.வின் பாஸ்ட்  தமிழ்நாடு.தமிழ்நாட்டை தேர்வு செய்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். 

நான் அடிக்கல் நாட்டிய 17 மாதத்தில் கார் உற்பத்தியை துவங்கியது. இதற்கு தொழில்துறை அமைச்சர் ராஜாவுக்கு இந்த பெருமை உண்டு.தூத்துக்குடி-யில் மின்சார தொழிற்சாலை வியட்நாம் நாட்டினர் தொடங்கி இருப்பது தமிழ்நாட்டிற்கும் வியட்நாமிற்கும் இடையே தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும்.இந்நாள் ஒரு பொன் நாள்,தூத்துக்குடி மற்றும் அருகே இருக்க கூடியவர்களை தான் ஆலையில் பணி அமர்த்த உள்ளனர்.
வின்பாஸ்ட் நிறுவனத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கின்றேன்.கார் நிறுவனம் மட்டும் இல்லாமல் கல்வி,மருத்துவம் போன்ற சேவைகளையும்  நீங்கள் கொண்டு வர வேண்டும் என்பது என ஆசை.
நீங்கள் கொண்டு வரும் திட்டங்கள் அனைத்திற்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.முதல்வர் பேச்சு.

 

Tags : தூத்துக்குடியில் வின் பாஸ்ட் கார் தொழிற்சாலையை முதல்வர் திறந்துவைத்தார்.

Share via

More stories