இன்று வெளியாகிறது மதிமுக தேர்தல் அறிக்கை

by Staff / 06-04-2024 11:39:03am
இன்று வெளியாகிறது மதிமுக தேர்தல் அறிக்கை

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மதிமுக மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறது. தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட உள்ளார். திமுக கூட்டணியில் உள்ள மதிமுக மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories