அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1.26 கோடி மோசடி செய்த இருவர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மதுரை ஆட்சியர் அலுவலகத்திலேயே நேர்காணல் நடத்தி ஒரு கோடி ரூபாய் 26 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். முனீஸ்வரன் என்பவர் தனுக்கு அறிமுகமான சேகர் என்பவரின் மகனுக்கும் மகளுக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி எட்டு லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு பின் அவர்களது வீட்டிற்கு போலி பணி ஆணைகளை அனுப்பி உள்ளார். 266 பேரிடம் ஒன்றரை லட்ச ரூபாய் முதல் எட்டு லட்ச ரூபாய் வரை என மொத்தம் ஒன்னேகால் கோடி ரூபாய் வசூலித்த முனீஸ்வரன் அவர்களுக்கும் பணி ஆணைகளை அனுப்பி உள்ளார். பல நாட்கள் ஆகியும் வேலைக்கு அழைப்பு அளிக்கப்படாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து முனீஸ்வரன் அவனது கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர்.
Tags :