முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

by Staff / 12-08-2023 02:02:22pm
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துதல், பயனாளர்களை முறையாக தேர்வு செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர்களுடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories