லாரியில் சிக்கி அலறி துடித்த 3 பேர்

by Staff / 24-04-2023 03:19:23pm
லாரியில் சிக்கி அலறி துடித்த 3 பேர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த தக்காளி வியாபாரி கண்ணதுறை(55). இவர் கோயம்பேட்டில் தக்காளி லோடு இறக்கிவிட்டு மினி லாரியில் வந்து கொண்டிருந்தார். மினி லாரியில் டிரைவர் ரவி(23), க்ளீனர் ராகுல்(18) இருந்தனர். இந்த மினி லாரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் அருகே வந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் மினி லாரி நொறுங்கியதால், இடிபாடுகளில் சிக்கி மூன்று பேரும் துடித்தனர். தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

Tags :

Share via

More stories