போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க அமித்ஷா வேண்டுகோள்
துடில்லியில் நடைபெற்ற என் சி ஓ ஆர் டி இன் ஒன்பதாவது உயர்மட்ட கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். அக்கூட்டத்தில் மூன்று ஆண்டுகால ஒருங்கிணைந்த நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார் ஒவ்வொரு காவல் நிலையமும் முக்கிய குற்றவாளிகளிடம் இரக்கமற்ற அணுகுமுறை ,பதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அணுகுமுறை மற்றும் தடையியல் மற்றும் சட்ட விதிகளை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் அச்சுறுத்தலை வேரோடு பிடுங்க அர்ப்பணிப்பு உள்ள அதிகாரிகளின் குழுக்களை உருவாக்குமாறும் .போதைப் பொருள் ஒழிப்பு என்பது ஒரு அரசு அல்லது துறையின் வேலை மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும் என்றும் இளைஞர்களிடையே போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும்போதைப் பொருள் கடத்தலை தடுக்க மாநில அரசுகளும் மத்திய அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்..
Tags :



















