முதலில் சுடவும் -பிறகு பேசவும் என்ற ஆணை இன்னும் நடைமுறையில்- டென்மார்க் பிரதமர் மெட்ரோ பிரடரிக்சன் எச்சரிக்கை

by Staff / 10-01-2026 12:18:22pm
முதலில் சுடவும் -பிறகு பேசவும் என்ற ஆணை இன்னும் நடைமுறையில்-  டென்மார்க் பிரதமர் மெட்ரோ பிரடரிக்சன் எச்சரிக்கை

கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் அது மிரட்டும்  முடிவாக அமையும் என்று டென்மார்க் பிரதமர் மெட்ரோ பிரடரிக்சன் எச்சரித்து உள்ளார். அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் 1952 ஆம் ஆண்டில் பனிப்போர் காலத்தில் உருவாக்கப்பட்ட விதியை குறிப்பிட்டு வெளிநாட்டு ராணுவம் அச்சுறுத்தல் விடுத்தால் முதலில் சுடவும் பிறகு பேசவும் என்ற ஆணை இன்னும் நடைமுறையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமெரிக்க கைப்பற்றும் என்றும் சீனா அல்லது ரஷ்யா அந்த தீவை கைப்பற்றுவதை தடுக்கவே அமெரிக்கா இதை செய்ய விரும்புவதாகவும் டொனால்டு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு கிரீன் லாந்தும் டென்மார்க்கும் விற்பனைக்கு அல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளதோடு 57 ஆயிரம் குடிமக்களை கொண்ட ஒரு நாட்டை மற்றொரு நாட்டிற்கு விற்பனை செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா , கிரீன் லாந்து- டென்மார்க் மக்களை இணைப்பதற்கான ஆசை வார்த்தையாக ஒவ்வொரு கிரீன்லாந்து மக்களுக்கு சுமார் இந்திய மதிப்பில் 8 லட்சத்திலிருந்து 80 லட்சம் வரை வழங்க ஆலோசித்து வருவதாக தகவல் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இது பற்றி விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ டென்மார்க் செல்ல த்திட்டமிட்டுள்ளார்.

முதலில் சுடவும் -பிறகு பேசவும் என்ற ஆணை இன்னும் நடைமுறையில்-  டென்மார்க் பிரதமர் மெட்ரோ பிரடரிக்சன் எச்சரிக்கை
 

Tags :

Share via

More stories