சென்னையில் கஞ்சா சாக்லேட், கஞ்சா கேக் விற்பனை

நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் என்ற புதிய வகை போதை பொருளை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக சோதனை நடத்திய போலீஸார் அப்பகுதியில் உணவகம் நடத்தி வரும் ரோஷன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தாமஸ் என்ற மற்றொரு நபரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கொள்முதல் செய்து அதை கலந்து போதை கேக் தயாரித்து அதை ரூ.3000 வரை விற்றது தெரிய வந்துள்ளது.
Tags :