1 முதல் 9ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும் - ஜி.கே. வாசன்

by Staff / 18-09-2022 01:31:54pm
1 முதல் 9ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும் - ஜி.கே. வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும் தற்பொழுது பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது எச்1என்1, இன்ப்ளுயன்சா காய்ச்சல் என்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள காய்ச்சலில் இருந்து நாம் விடுபட கட்டாயம் முகவசம் அணிய வேண்டும். மேலும் எச்1என்1 இன்ப்ளுயன்சா காய்ச்சல் குழந்தைகளுக்கு எளிதில் பரவுவதால் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலங்கள் வரை விடுமுறை அளிக்க வேண்டும். அவர்களுக்கு கற்றல் தடைப்படாமல் இருக்க ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via