இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காவாஜா ஆசிப் மிரட்டல்
ஜம்மு காஷ்மீரின் பகல் காம் பகுதியில் கடந்த ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதன் காரணமாக சிந்து நதிநீர் விவகாரத்தில் தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காவாஜா ஆசிப் மிரட்டல் விடுத்துள்ளார். தண்ணீர் என்பது எங்களது தேசிய பாதுகாப்பில் ஒரு பகுதி அதற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அடுத்த நொடிய இந்தியாவுக்கு எதிராக போர் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியா தண்ணீரை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகிறது என்றும் நீர் விநியோகத்தை இந்தியா தடுத்தா ஆதாரப்பூர்வமான தகவல்களைத் தான் ராணுவ நடவடிக்கை குறித்து தீவிரமாக பரிசளிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு இந்திய தரப்பிலிருந்து எல்லை தாண்டிய பயங்கரவாத கட்டமைப்புகளை பாகிஸ்தான் முழுமையாக அழிக்கும் வரை இந்த ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைக்கு வராது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி வரும் ஜூன் 2028க்குள் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியின் நீர் முழுமையாக நிறுத்தப்படும் என்றும் இந்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சிந்து நதியின் ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தானிற்கு 80 விழுக்காடு நீர் கிடைத்து வந்த நிலையில், தற்பொழுது நிறுத்தப்பட்டதால் பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் விவசாயமும் குடிநீர் தேவைக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது .தற்போதைய நிலையில், பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அண்மையில் சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி ஐ.நா பாதுகாப்பு மன்றத்தை அணுகி உள்ளது .
Tags :













.jpg)




