சகோதரிகள் பலாத்காரம்.. தற்கொலை செய்த சோகம்
சமீபத்தில் அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் நடந்த ஓர் கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. துளசிபாரி பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் குண்டர்களால் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதனால் மனமுடைந்த சகோதரிகள் திடீரென தற்கொலை செய்து கொண்டனர். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :



















