அனைத்துப்பகுதிகளுக்கும் மழை வெள்ளச்சேத நிவாரணம் வழங்கவேண்டும்- விஜய பிரபாகரன்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் பயிர் சேதங்களை பார்வையிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் செய்தியாளர்கள்மத்தியில் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. ஆனால் நிவாரண உதவிகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி தாலுக்கா பகுதிகளுக்கு மட்டும் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை குத்தாலம் தாலுகாக்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும், தமிழகத்தில் அனைத்து மாநில படங்களும் வரவேற்கப்படுகின்றன. பேன் இந்தியா என்ற வகையில் சினிமா ட்ரென்டாகி வருவதால் விஜய் உள்ளிட்ட அனைத்து மாநில படங்களையும் வெளியிட வேண்டும், தெலுங்கு சினிமாவில் விஜய் படத்தை திரையிட தடுப்பது ஏற்புடையதல்ல என்றார்.
Tags :



















