பனிமயமாதா பேராலயத் திருவிழா: பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத் திருவிழாவை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 442வது ஆண்டு விழாவாக ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.பனிமயமாதா பேராலயத்தின் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற தேமுதிக சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இவ்விழாவை சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு சமத்துவ விழாவாக கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் அன்னை மாதாவின் அருளை பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :