இரு இன்னிங்சிலும் சதம் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 476 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அசார் அலி 185 ரன்னிலும், இமாம் உல் ஹக் 157 ரன்னிலும் வெளியேறினர்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 459 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வார்னர் 68 ரன், உஸ்மான் கவாஜா 97 ரன், லபுஸ்சனே 90 ரன், ஸ்மித் 78 ரன்னில் அவுட்டாகினர்.பாகிஸ்தான் அணி சார்பில் நவ்மான் அலி 6 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 17 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக ஆடி சதமடித்து அசத்தியதுடன், விக்கெட் விழாமலும் பார்த்துக் கொண்டனர்.
இறுதியில், ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 252 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 136 ரன்னும், இமாம் உல் ஹக் 111 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
இதனால் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இரு இன்னிங்சிலும் சதமடித்து அசத்திய இமாம் உல் ஹக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
Tags :