போதை மாத்திரை விற்ற வாலிபர்கள் கைது
ஈரோடு ஈபி நகர் பகுதியில் கோதை மாத்திரை விற்பனை நடைபெற்று வருவதாக ஈரோடு மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் மதுவிலக்கு காவல் துறை அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் அப்போது இபி நகர் நான்கு ரோடு பகுதியில் சந்தேகப்படும் படியாக மூன்று நபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர் காவல்துறையினரை கண்டதும் வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தனர். உடனே காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து சாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோடு மாணிக்கம் பாளையம் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வசந்த். தஞ்சாவூர் மாவட்டம் வண்டி பேட்டையை சேர்ந்த வடிவேல் மகன் கௌதம். ஈரோடு மாணிக்கம்பாளையம் முதல் வீதியைச் சேர்ந்த செரிப் மகன் அமீர். ஆகியோர் என்பது தெரிய வந்தது அவர்களது உடைமைகளை சோதனை செய்த போது வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 420 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் இதுபோன்று போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதில் தொடர்கதையாக உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Tags :