ரூ.50 லட்சம் இழப்பீடு.. மத்திய அரசு தகவல்

by Staff / 01-07-2024 02:34:05pm
ரூ.50 லட்சம் இழப்பீடு.. மத்திய அரசு தகவல்

கேஸ் சிலிண்டர் வெடித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் இழப்பீடு வழங்கப்படும். சிலிண்டர் வெடி விபத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு ரூ.10 லட்சம் வீதம் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை அந்த குடும்பத்திற்கு கிடைக்கும். யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் கிடைக்கும். மேலும் சொத்து சேதத்திற்கு ரூ.2 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படும். இதற்கு முதலில் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். பின்னர் FIR காப்பி, மருத்துவமனை பில், இறந்துவிட்டால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், இறப்பு சான்றிதழ் ஆகியவற்றை டீலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

 

Tags :

Share via