தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்

by Staff / 01-07-2024 02:30:53pm
தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, வனத்துறை செயலராக உள்ள சுப்ரியா சாகு சுகாரத்துறை செயலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீர்வளத்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் கே.மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை சுகாதாரத்துறை செயலராக இருந்த ககன்தீப் சிங்பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை செயலராக இருந்த செந்தில் குமார் வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via